இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிம்பு நடித்த படங்களிலேயே, நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்தது, இது நம்ம ஆளாகத் தான் இருக்கும். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின், மீண்டும் அவருடன், சிம்பு ஜோடி சேர்ந்த படமிது. இயக்குனருடனான மோதல், கால்ஷீட் பிரச்னை என, இழுத்தடித்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து விட்டன. ஒரே ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனமாட, நயன்தாராவை அழைத்தபோது, 'ஏற்கனவே ஏகப்பட்ட கால்ஷீட் கொடுத்தாச்சு. இனி வேலைக்கு ஆகாது' என, எகிறி விட்டாராம். இதனால், அவருக்கு பதிலாக, அந்த பாடலுக்கு நடமாட ஹன்சிகாவை அணுகியுள்ளதாம், படக்குழு. நயன்தாரா மீதுள்ள கோபத்தை காட்டுவதற்காக, இது நம்ம ஆளு படத்தில், அவருக்கு முக்கியத்துவத்தை குறைத்து, ஆண்ட்ரியாவுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 'படம், வெளிவந்தபின், இன்னும், என்னென்ன நடக்கப் போகிறதோ' என, புலம்புகிறது கோலிவுட் வட்டாரம்.