தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரண்மனை - 2 படத்தில், தான் நடித்த கர்ப்பிணி வேடத்துக்கு, ரசிகர்களின் பாராட்டு குவிவதால், உற்சாகத்தில் இருக்கிறார், கோலிவுட்டின் அமுல் பேபி ஹன்சிகா. 'இதுவரை இப்படிப்பட்ட வேடத்தில் நடித்ததும் இல்லை; இதுபோன்ற பாராட்டுகளும் கிடைத்தது இல்லை' என, கண்களை சுருக்கி, உதட்டை குவித்து பளீர் என, புன்னகைக்கிறார். கவர்ச்சி பொம்மையாக வலம் வந்த ஹன்சிகா, கர்ப்பிணி வேடத்துக்கு கிடைத்த பாராட்டால், தன் ரூட்டை மாற்ற முடிவு செய்துள்ளார். இனியும், கவர்ச்சி பொம்மையாக வலம் வராமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால், கவர்ச்சி ஹீரோயின் வேடத்துக்கு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்யச் செல்லும் இயக்குனர்கள், சற்று யோசித்து விட்டுச் செல்வது நல்லது.