சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மலையாள திரையுலகில் இப்படியும் கூட ஒரு செய்தி இருக்கத்தான் செய்கிறது. தங்களது அபிமான நடிகர் அந்த ஹீரோயினுடன் நடிக்கவேண்டும்.. இந்த ஹீரோயினுடன் நடிக்க கூடாது என ரசிகர்கள் நினைக்கத்தான் செய்வார்கள்.. சமீபகாலமாக அதை சோஷியல் மீடியாக்களில் தங்களது குரலாக பதிவும் செய்கிறார்கள்.. அப்படித்தான் சமீபத்தில் அனு இம்மானுவேல் என்கிற புதிய ஹீரோயின் ஒருவர் “என்னை துல்கரோட 'சார்லி' படத்துலேயே நடிக்க கூப்பிட்டாக.. நான் தான் படிப்பு முடியட்டும்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்” என பேட்டிதோறும் சொல்லிவந்தார்... இப்போதும் கூட சொல்லி வருகிறார். இவர் தான் கடந்த வாரம் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்தவர்..
ஆனால் இவ்வளவு பில்டப் கொடுக்கும் அனு இம்மானுவேலின் முகமும் அவரது நடிப்பும் ரசிகர்களை வசீகரிக்கவில்லை.. அதனால் தானோ என்னவோ படத்திலேயே நான்கைந்து காட்சிகளில் மட்டும் வந்தவருக்கு, நிவின்பாலியுடன் ஒரு பாடலும் ஒரு காட்சியும் மட்டும் சேர்ந்து வரும் வாய்ப்பை கொடுத்திருந்தார்கள்.. மற்ற இரண்டு மூன்று காட்சிகளில் நிவின்பாலியுடன் போனில் மட்டுமே பேசுவார் இந்த நாயகி.. படத்தின் புரமோஷன் போஸ்டர்களில் கூட இஅவரது படம் இடம்பெறவில்லை. இவரை திரையில் பார்த்த துல்கரின் ரசிகர்கள் “ஏம்மா.. பார்வதி எங்கே.. நீ எங்கே.. அப்பாடா.. எங்க துல்கர் கூட நீ நடிக்காமல் போனதே ரொம்ப நல்லதா போச்சு” என தங்களது மகிழ்ச்சி பெருமூச்சை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள்.