'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
2008ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் கிருஷ்ணார்ஜுனா. நாகார்ஜுனா, மஞ்சு விஷ்ணு (மோகன்பாபு மகன்), மம்தா மோகன்தாஸ், மோகன்பாபு நடித்திருந்த இந்தப் படத்தை பி.வாசு இயக்கினார். மோகன்பாபு தயாரித்திருந்தார், மரகத மணி இசை அமைத்திருந்தார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். நாசர், நெப்போலியன், மனோரமாவுடன் பி.வாசுவும் நடித்திருந்தார். காமெடி ஆக்ஷன் படம்.
மனநலம் குன்றிய பெண் ஒருத்தி கிருஷ்ணன் கோவில் கருவரையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இதனால் கருவரை தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி ஊர் மக்கள் கோவிலை மூடிவிடுகிறார்கள். குழந்தையை மனோரமா தத்தெடுத்து வளர்க்கிறார். அவன் வளர்ந்து ஆளானதும் கோடீஸ்வரர் நாசரின் மகள் மம்தாவிற்கு மெய் காப்பாளராகிறார். “மம்தாவுக்கு திருமணம் நடந்தால் கணவர் இறந்து விடுவார். அவருக்கு 2வது திருணம்தான் நிலைக்கும் என்று ஜோதிடம் கூறுவதால் பெயருக்கு ஒருவரை மம்தாவுக்கு திருமணம் செய்து வைத்து பிறகு அவரை கொன்று விட்டு இரண்டாவதாக கோடீஸ்வர மாப்பிள்ளையை கட்டிவைக்க திட்டமிடுகிறார் நாசர். மகளின் மெய்காப்பாளரான விஷ்ணுவையே திருமணம் செய்து வைத்துவிட்டு கொல்ல நினைக்கிறார். அவரைக்காப்பாற்ற கிருஷ்ணன் (நாகார்ஜுனா) வருகிறார். இப்படியொரு ஜாலியான கதை.
இந்தப் படத்தை ரவுடி மாப்ளே என்ற தலைப்பில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இ.எம்.எஸ்.ராஜா தமிழ் வசனங்கள், பாடல்களை எழுதுகிறார். சிவம் அசோசியேட்ஸ், மீடியா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வெளியிடுகிறது.