நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
சென்னைக்கு மிக மிக அருகில் என்று சொல்லி விழுப்புர இடத்தை விற்கும் நிஜமான ரியல் எஸ்டேட் காமெடியை சினிமாவில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் ரியல் எஸ்டேட் காமெடியை முழுமையாக பயன்படுத்தி வருகிறது 'நவசர திலகம்'. விஜய் டி.வி. தொகுப்பாளர் மா.பா.கா.ஆனந்த் சோலோ ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்கள் தவிர கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, மீரா கிருஷ்ணன், மகாதேவன் நடிக்கிறார்கள். ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். வருகிற 19ந் தேதி படம் ரிலீசாகிறது.
ஹீரோ மா.பா.கா.ஆவுக்கு திடீர் பணக்காரனாக ஆசை. இதனால் அப்பாவின் பணத்தையெல்லாம் போட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். போட்ட பணமெல்லாம் அவுட். பின்னர் நண்பன் கருணாகரன் பணத்தை போட்டு மீண்டும் பிசினசை ஆரம்பிக்கிறார் அதவும் அவுட். இதற்கு காரணம் யார் என்று பார்த்தால் வில்லன் பிதாமகன் மகாதேவன். வில்லன் ரூட்டிலேயே சென்று வில்லனை வீழ்த்தி தங்கள் பணத்தை மா.பா.கா.ஆவும், கருணாகரனும் எப்படி மீட்கிறார்கள் என்கிற காமெடி படம். பர்மா படத்தை தயாரித்த ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.