பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அரண்மனை படத்தில் பேயாக நடித்த ஆண்ட்ரியா அதையடுத்து வலியவன், உத்தம வில்லன் படங்களில் நடித்தவர், தங்கமீன்கள் ராமின் தரமணி படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நடிப்பதோடு இல்லாமல் ஒரு ஆங்கில பாடலை தானே எழுதி கம்போஸ் செய்து பின்னணி பாடி நடித்திருந்தார் ஆண்ட்ரியா. தன்னை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்தார் அவர். ஆனால் படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தற்போது கிடப்பில் கிடக்கிறது.
அதனால் புதிய படங்களுக்கான படவேட்டையை தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறார் ஆண்ட்ரியா. அப்படி அவர் எடுத்த அதிரடி முயற்சி காரணமாக தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் சமந்தா குப்பத்து பெண்ணாக நடிக்க, ஆண்ட்ரியா ஒரு விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். இதற்கு முன்பு விலைமாது வேடங்களில் அனுஷ்கா, சங்கீதா உள்பட பல நடிகைகள் நடித்திருந்தபோதும், தான் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்து விருதுகளை கைப்பற்றிவிட வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறாராம் ஆண்ட்ரியா.