ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். காதலும் கடந்து போகும் வெளியான அடுத்த வாரத்தில் அதாவது 19ஆம் தேதி விஜய்சேதுபதியின் இன்னொரு படமான சேதுபதி படம் வெளியாகவிருந்தது. இதற்கான திட்டமிடல்கள் நடந்து வந்தநிலையில் காதலும் கடந்து போகும் படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
காதலும் கடந்து போகும்' படத்தின் ரிலீஸ் ஆக வேண்டிய தேதியில் சேதுபதி படத்தை வெளியிட உள்ளனர். விஜய்சேதுபதி நடித்த இரண்டு படங்களின் வெளியீட்டு தேதி இப்படி உல்டாவாக மாறியது ஏன்?
சேதுபதி படத்தை வேறு தயாரிப்பாளர் தயாரித்திருந்தாலும் அந்தப் படத்தை வாங்கி வெளியிடுவது விஜய்சேதுபதியின் ஆரஞ்சு பிலிம்ஸ்தான். அவரது நண்பரது பெயரில் செயல்படும் இந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் விஜய்சேதுபதிதான். எனவே தன்னுடைய நிறுவனம் வெளியிடும் சேதுபதி படம் முதலில் வெளியானால் தனக்கு பண வரவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய்சேதுபதி. அதன் காரணமாகவே தங்களின் படத்தை அடுத்த மாதம் தள்ளி வைக்க உடன்பட்டார்களாம் காதலும் கடந்து போகும் தயாரிப்பாளர்கள்.
இப்படியொரு தகவல் அடிபடும் அதே நேரம் இன்னொரு தகவலும் படத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சேதுபதி படத்தின் கதையும், தெறி படத்தின் கதையும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கதையாம். காதலும் கடந்து போகும் முதலில் வெளியாகி, சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பாராமல் தள்ளிப்போய், அதற்கு முன்னால் தெறி படம் வெளியாகிவிட்டால் அது சேதுபதி படத்தை மிகவும் பாதிக்கும் என்று நினைத்தாராம் விஜய்சேதுபதி. அதனாலேயே சேதுபதியை முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.