ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான படம் 'கும்கி'. இதேப்போன்று நடிகை லக்ஷ்மி மேனனும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான படம் இந்த கும்கி. விக்ரம்-லக்ஷ்மி இருவருக்கும் நல்ல அறிமுகத்தை தந்த இப்படத்தை, பிரபு சாலமன் இயக்கி இருந்தார். யானையை பின்னணியாக கொண்டு ஒரு அழகிய காதலையும் சொல்லியிருந்தார் பிரபுசாலமன். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பெரிய லாபத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக பிரபு சாலமன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது... ''தனுஷை வைத்து நான் இயக்கி வரும் படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் படம் ரிலீஸாகும். இதன்பின்னர் கும்கி-2-வை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன். ஹீரோ-ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்கள் யாரும் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.