ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ்கஹினி என்ற வங்க மொழி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய டைரக்டர் மகேஷ் பட் திட்டமிட்டுள்ளது ஏற்கனவே நாம் அறிந்த செய்தி தான். ஆனால், சமீபத்தில் மகேஷ் பட் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர், இந்த படத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாத துவங்க உள்ளது. இதில் வித்யா பாலன் நடிக்கிறார். ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல் போன்றோர் அவர்களின் படங்களில் பிஸியாக உள்ளனர். எனது மகள் ஆலியா பட்டும் ஹைவே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்கஹினி, நடிகையும் இயக்குனருமான ரிதுபர்ணா சென்குப்தாவின் அற்புதமான நடிப்பில் உருவான படங்களில் ஒன்று. இந்த கதை மிக த்ரில்லிங்கானது. அதன் மைய கருத்து தான் என்னை இப்படத்தை ரீமேக் செய்ய தூண்டியது. இதன் இந்தி படத்தில் 8 நடிகைகள் நடிக்க உள்ளனர். ஆனால் அவர்களில் வித்யாவிற்கு முக்கிய ரோல். இது மிக பலமான, விறுவிறுப்பான படம் என தெரிவித்தார்.