ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீ ஸ்ரீ எனும் படத்தில் நடித்து வருகின்றார். கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் கதாநாயகியுமான நிர்மலாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நிர்மலாவின் மகன் நரேஷ் இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெறும் இவ்விழாவில் கிருஷ்ணாவின் மகனும் பிரபல நடிகருமான மகேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, ஸ்ரீ ஸ்ரீ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு மகேஷ் பாபு பின்னணியும் பேசியுள்ளாராம்.