பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'இறுதிச் சுற்று'. படம் வெளியான நாள் முதலே இப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். நேற்று பல புதிய படங்கள் வெளிவந்தாலும் இந்தப் படத்திற்கு கூடுதலாக தியேட்டர்கள் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நேற்று வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்புப்படி அந்தப் படங்கள் அமையவில்லை என்கிறார்கள்.
நேற்று வெளியான 'விசாரணை' படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பாராட்டியிருந்தனர். இதெல்லாம் சம்பந்தப்பட்ட பட நிறுவனமே அவர்களைத் தேடிப் போய்ச் சென்று படத்தைப் பற்றி பாராட்டுங்கள் என்று சொன்ன பிறகு கிடைத்த பாராட்டுக்கள். அதே சமயம், 'இறுதிச் சுற்று' படத்தைத் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் தாங்களாகவே பார்த்து பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ளார்.
“இறுதிச்சுற்று - பெண்களுக்கு மரியாதை. இயக்குனர் சுதாவின் அற்புதமான முயற்சி. மாதவன், ரித்திகாவின் சூப்பரான நடிப்பு, சந்தோஷின் இனிமையான இசை” என இயக்குனர் ஷங்கர் பாராட்டியிருக்கிறார். கேட்டு வாங்கும் பாராட்டுக்களை விட, இது போன்ற உண்மையான பாராட்டுக்கள்தான் இது போன்ற படங்களை இன்னும் பெருமைப்படுத்தும்.