ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் மம்முட்டி நயன்தாரா நடித்துள்ள படம், இந்தியில் ரீமேக்காக போகிறது என்கிற செய்தி வெளியாகியுள்ளது. உடனே கடந்த வருடம் சித்திக் இயக்கத்தில் இவர்கள் இருவர் நடிப்பில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் தானே அது என்று தான் நினைக்க தோன்றும். காரணம் ஏற்கனவே சித்திக்கின் 'பாடிகார்டு' படம் ஹிந்திக்கு போய் வெற்றிக்கொடி கட்டியது தெரிந்தது தானே. ஆனால் இப்போது ரீமேக் பேச்சில் அடிபட்டிருப்பது அந்தப்படம் இல்லை.. மம்முட்டி, நயன்தாரா நடிப்பில், வரும் பிப்-12ல் வெளியாக இருக்கும் 'புதிய நியமனம்' படம் தான்.
இந்தப்படத்தின் இயக்குனர் ஏ.கே.சாஜன் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறாராம். படம் ரிலீசாவதற்கு முன்னரே எப்படி இந்த மவுசு திடீரென வந்தது என்றால், இந்தப்படத்தை பற்றி கேள்விப்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் இந்தப்படத்தில் நயன்தாரா நடித்திருக்கும் கேரக்டரில் வித்யாபாலனோ அல்லது கங்கனாவோ நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம். அதுமட்டுமல்ல, மும்பையில் வைத்து இவர்கள் இருவருக்கும் சிறப்பு காட்சி ஒன்றையும் திரையிட்டு காட்டினார்களாம். படமும் நயன்தாராவின் கேரக்டரும் இருவருக்குமே பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரீமேக்கில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள் 'புதிய நியமனம்' படக்குழுவினர்.