பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கரண் ஜோகர் தயாரிப்பில், சவுகான் பத்ரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கபூர் அண்ட் சன்ஸ்'. சித்தார்த் மல்கோத்ரா, பவாத்கான், ஆலியாபட் நடிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், அதுவும் 85 வயது முதியவராக நடிக்கிறார் ரிஷி கபூர். இப்படத்தில் ரிஷி கபூரின் முதல்ஸ்டில் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ரிஷியை அடையாளம் கொள்ள முடியவில்லை. சற்று உற்றுநோக்கி பார்த்தால் தான் அவர் ரிஷி கபூர் என்றே தெரிகிறது. அந்தளவுக்கு அவரது தோற்றம் முழுமையாக மாறியுள்ளது.
ரிஷிகபூரின் இந்த தோற்றத்திற்காக ஹாலிவுட்டில் இருந்து கிரேக் கேனோம் என்ற ஸ்பெஷல் மேக்கப் மேனை வரவழைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தோற்றத்திற்காக ரிஷி கபூர் தன்னை முழுமையாக அர்பணித்துள்ளார். காலையில் 5 மணிக்கே மேக்-அப் போட அமர்ந்துவிடுவாராம். சுமார் 5 முதல் 6 மணி வரை இந்த மேக்-அப் நடக்கும், அதுவரை பொறுமையாக இருப்பாராம் ரிஷி கபூர். இந்த வயதிலும் ரிஷியின் அர்ப்பணிப்பை பார்த்து படக்குழுவே வியக்கிறது.
இதுப்பற்றி ரிஷி கபூர் கூறியதாவது... ''கரண் ஜோகரும், இயக்குநர் சவுகான் பத்ராவும் இப்படம் தொடர்பாக என்னை சந்திக்க வந்தனர். அப்போது எனது ரோல் பற்றியும் சொன்னார்கள். அப்போது அவர்களிடத்தில் இதுபோன்ற ரோலுக்கு கிரேக் தான் சரியான மேக்கப் மேனாக இருப்பார். அவரைப்பற்றி நான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவர் இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்வாரா என்று தெரியவில்லை என எனது விருப்பத்தை சொன்னேன். மேலும் அவருக்கான சம்பளம் ரூ.1.50 கோடி முதல் ரூ.1.70 கோடி வரை ஆகும். ஆனால் கரண் ஜோகர் அதைப்பற்றி பெரிதாக கருதவில்லை என்றார்.