தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் சூப்பர்ஸ்டார் அக்ஷ்ய் குமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த திரைப்படம் ஏர்லிஃப்ட். 1,70,000 இந்தியர்களை குவைத் இராக் போரின் போது காப்பாற்றிய ஒரு இந்தியரின் கதை. இது, அனைத்து ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. அனைத்து இந்தியர்களும் பார்க்கவேண்டிய திரைப்படம் என்ற பாராட்டையும் பெருமையையும் பெற்றுள்ள ஏர்லிஃப்ட் கடந்த 5 நாட்களில் ரூ. 60 கோடி வசூலை தாண்டியுள்ளது.
கடந்த வெள்ளியன்று முதல் நாள் வசூலாக ரூ. 12.35 கோடியை அள்ளிய திரைப்படம், சனிக்கிழமை ரூ. 14.60 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ. 17.35 கோடி, திங்கள் கிழமை 10.40 கோடியையும் குடியரசு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை 10 கோடிக்கு மேல் வசூல் செய்து மொத்தம் 64 கோடியை தாண்டியுள்ளது. ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் 9.5/10 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், படக்குழுவினர் மொத்தமும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் விரைவில் திரைப்படம் 100 கோடியை கடந்து நல்ல வசூல் சாதனையையும் அடையும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.