பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை படமாக்கும் படலம் தொடங்கி விட்டது. மேரிகோம், பாகா மில்க் சிங் என்ற படங்கள் வந்த நிலையில் தற்போது, கிரிக்கெட் வீரர் தோனி படம் உருவாகி வருகிறது அதே போல முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மொகமத் அசாருதின் படம் இந்த ஆண்டு வெளிவர உள்ளது. சோனம் கபூர் நடிப்பில் நீரஜா படமும் உருவாகி வருகிறது. சாய்னா நேவல் பையோபிக்கை தீபிகா படுகோனே செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் பல கோடி உலக ரசிகர்களை கொண்டுள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றைத் தற்போது படமாக உருவாக்க மும்பை தயாரிப்பு நிறுவனமான 200 நாட் அவுட் முயற்சி செய்து வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் கதாபாத்திரத்தில் எந்த நடிகரை போடுவது என்று குழம்பிக் கொண்டிருந்த நிலையில், ஏன் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்கக் கூடாது என்று யோசித்து, சச்சின் டெண்டுல்கரை அவரது சொந்த வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வைக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த திரைப்படம் உருவாகினால் உலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெரிய எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை படக்குழுவினரின் அதிகாரப்பூர்வமான தகவலுக்கு சிறிது காலம் காத்திருப்போம்!