இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் இம்ரான் கானும் ஒருவர். இவர், தமிழில் பிரசன்னா-லேகா நடிப்பில் வெளியான ''கல்யாண சமையல் சாதம்'' படத்தின் ரீ-மேக்கில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இப்போது கார்த்திக் ஆர்யன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து இம்ரான் கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது... 'கல்யாண சமையல் சாதம்' படத்தின் ரீ-மேக்கில் என்னை நடிக்க கேட்டனர். நான் நடிக்க சம்மதம் சொல்லியிருந்தேன். படத்தின் தமிழ் பதிப்பின் கதை நன்றாக இருந்தது. அதை ஹிந்தி சினிமாவிற்கு ஏற்றபடி கதையை கொண்டு வர சொல்லி இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் இன்று வரை கதையின் ஒரு பேப்பரை கூட நான் படிக்கவில்லை. பிறகு நான் எப்படி இந்தப்படத்தில் நடிக்க முடியும், அதனால் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.