ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை கிர்தி சனோன். சமீபத்தில், ஷாரூக்கான், கஜோல், வருண் தவான் உடன் இவரும் நடித்த 'தில்வாலே' படம் வெளியானது. தில்வாலே படம் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை குவித்து வருகிறது. ஷாரூக்கானின் முந்தைய படங்களின் வசூலை இப்படம் எட்டவில்லை, ஆனாலும் லாபம் சம்பாதித்து இருக்கிறது.
சமீபத்தில் கிர்தி சனோனிடம் பாய்பிரண்ட் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கிர்தி சனோன், ''என் வாழ்க்கையில் 'பாய் பிரண்ட்'க்கு இடம் கிடையாது. 'பாய்பிரண்ட்' உடன் செலவிட எனக்கு நேரம் கிடையாது. பாய்பிரண்டு என்று ஒருவர் வாழ்க்கையில் வந்துவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி போய்விடும்'' என்று கூறியுள்ளார்.
கிர்தி சனோன், அடுத்தப்படியாக தினேஷ் விஜயன் இயக்கும் புதிய படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.