ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில், 'ஹேராம்' படத்தில் கமல்ஹாசன் உடன் நடித்தவர் நடிகை ராணி முகர்ஜி. பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை ரகசியமாக காதலித்து வந்தார். கடந்தாண்டு இவர்களது காதல் வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் இத்தாலி நாட்டில் ரகசியமாக கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராணி முகர்ஜி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று(டிச.9ம் தேதி) அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். குழந்தைக்கு ஆதிரா என்று பெயர் வைத்துள்ளனர். ராணிமுகர்ஜி, ஆதித்யா இருவரின் பெயரில் இருந்து ஆதிரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.