மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பிரபல பெங்காலி இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி. இவர் பெங்காலி மொழியில் இயக்கிய சூப்பர் ஹிட் படம் ராஜ்காஹினி. இப்படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஸ்ரீஜித்முகர்ஜி. இப்படத்தில் நடிகை வித்யாபாலன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதுப்பற்றி இயக்குநர் ஸ்ரீஜித் கூறியுள்ளதாவது... எனது முதல்படமான ராஜ்காஹினி படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளேன். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ் பிலிம்ஸ் மற்றும் விக்னேஷ் பிலிம்ஸ் தயாரிக்கிறார்கள், மகேஷ்பட் வெளியிடுகிறார். தற்போது படத்திற்கான கதையை உருவாக்கி வருகிறேன். பெங்காலியில் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருந்தேன். தற்போது இந்தியில், இந்தியா-பாகிஸ்தானை மையப்படுத்தி கதையை உருவாக்க உள்ளேன். அடுத்தாண்டு மத்தியில் படத்தை துவக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.