'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரபாகரன். முதல்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அடுத்தப்படியாக உதயநிதியை வைத்து இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் அவருக்கு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது வாகா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு இந்தப்படங்களை எல்லாம் முடித்த பின்னர் பிரபாகரன் படத்தில் நடிக்க இருக்கிறார்.