'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நிவின் பாலி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் திரைக்கு வந்த நேரம் படத்தின் வாயிலாக தமிழ் திரைக்கு அறிமுகமானவர் நஸ்ரியா. சில படங்களே நடித்தாலும் ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டார். தற்போது நேரம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
தமிழில் இது என்ன மாயம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பல தமிழ் படங்களில் நடித்து வருகின்றார். நேரம் படத்தின் தெலுங்கி ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சம்மதம் தெரிவித்துள்ளாராம். பிக்சல் ட்ரீம்ஸ் இந்தியா எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இதில் நடிகர் சுதீப் கிஷாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 123 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அனில் கன்னெகன்டி அல்லது அனில் சங்கரா இயக்கக் கூடும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.