இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்துள்ள டிக்டேட்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகைகள் அஞ்சலி மற்றும் சோனல் சௌகன் இப்படத்தில் நடித்துள்ளனர். டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள டிக்டேட்டர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படம் என்பதால் ஐதரபாத்திலிருந்து 99 கார்களில் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அமராவதி வரவுள்ளனராம். மேலும் ஒரு லட்சம் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளும் வகையில் பிரம்மாண்ட அரங்குகள் கட்டப்பட்டு வருகின்றதாம். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகின்றது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளிவரும் என படகுழு ஏற்கனவே அறிவித்துள்ளது.