மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்க உள்ள ஹாஃப் கேர்ள்பிரண்டு படத்தில் நடிகர் சுசாந்த் சிங் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. அவரும் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. இந்நிலையில் கால்ஷீட் பிரச்னையால் இப்படத்திலிருந்து சுசாந்த் சிங் விலகியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ஏக்தா கபூரின் படத்தில் மீண்டும் நடிக்கலாம் என்று ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் நடிக்க முடியாத சூழல் உள்ளது. ''ஹாஃப் கேர்ள்பிரண்டு'' படத்தினர் கேட்கும் அதேதேதியில் தினேஷ் படத்தில் நடிப்பதால் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனிடையே சுசாந்த் சிங் ராஜ்புட்டிற்கு பதிலாக அர்ஜூன் கபூர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜூன் ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்க உள்ளார்.