ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பாலிவுட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அடுத்தாண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரேநாளில் மோத உள்ளது. பொதுவாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி படம் துவங்கும்போதே அறிவிக்கப்பட்டு, சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டு விடும்(ஒருசில படங்கள் தவிர). அந்தவகையில் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான்கானின் ''டங்கல்'' மற்றும் ஷாரூக்கானின் ராயீஸ் படங்கள் மோத உள்ளன. இதேப்போன்று அஜய்தேவ்கானின் ஷிவ்வாய், ரன்பீர் கபூரின் ஏ தில்ஹே முஷ்கில் படங்களும் மோதுகின்றன.
இப்போது அந்த வரிசையில் அமீர்கானின் ''டங்கல்'' படமும், ராஜமெளலியின் ''பாகுபலி-2''வும் மோத உள்ளன. அடுத்தாண்டு 2016 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த இரண்டு படங்கள் மோதுகின்றன. இந்திய மல்யுத்த வீரர் மகாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு டங்கல் படமும், பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக பாகுபலி-2வும் வெளிவர உள்ளன.