'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 'தங்கமகன்' படம் இந்த மாதம் 18ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்டதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். “தங்கமகன் படத்தின் பின்னணி இசையை நிறைவு செய்கிறேன். அற்புதமான குடும்பத் திரைப்படம் உங்களை ரசிக்க வைப்பதற்காக டிசம்பர் 18ம் தேதி வருகிறது. நாங்கள் எந்த அளவிற்கு ரசித்தோமோ அதே அளவிற்கு நீங்களும் ரசிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. வழக்கம் போலவே இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல்களுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. '3' படத்தில் ஆரம்பமான தனுஷ் - அனிருத் கூட்டணி தொடர்ந்து வெற்றிகரமான கூட்டணியாக அமைந்து வருகிறது. தனுஷ் தயாரிக்கும் படங்களுக்கும் தொடர்ந்து அனிருத் தான் இசையமைத்து வருகிறார். '3' படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி, மாரி' படங்களுக்குப் பிறகு 'தங்கமகன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரித்த “எதிர் நீச்சல், காக்கி சட்டை, நானும் ரௌடிதான்” ஆகிய படங்களுக்கும் அனிருத்தே இசையமைப்பாளர்.
தமிழ்த் திரையுலகில் நெருக்கமான ஒரு கூட்டணியாக கண் திருஷ்டி படும் அளவிற்கு தனுஷ் -அனிருத் கூட்டணி தற்போது இருக்கிறது.