‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
படிப்புக்காக சில மாதங்கள் நடிப்பை ஒதுக்கி வைத்திருந்த லட்சுமி மேனன் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். கார்த்தி உடன் கொம்பன் படத்தில் நடித்த பிறகு புதிய படங்கள் ஏற்காமல் பிரேக் விட்டிருந்தார். அதன் பிறகு அஜித்தின் தங்கையாக 'வேதாளம்' படத்தில் நடித்த லட்சுமி மேனன் இடைப்பட்ட காலத்தில் புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்தார். 'வேதாளம்' படத்தை தொடர்ந்து லட்சுமி மேனன் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே படம் 'மிருதன்'.
'ஜெயம்' ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கிறது. கொம்பன் பட இயக்குநர் முத்தையா தற்போது இயக்கும் மருது படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோதுகூட மறுத்துவிட்டார் லட்சுமி மேனன்.
இந்நிலையில் அடுத்து ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது 'திருநாள்', 'போக்கிரி ராஜா ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா அடுத்து 'ஜெமினி கணேசன்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஜீவாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். இந்தப்படம் தவிர சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆக.. லட்சுமி மேனன் மீண்டும் நடிப்பில் பிஸியாகி இருக்கிறார்.