'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏக் வில்லன் படத்திற்காக நடிகை ஸ்ரத்தா கபூர் பைக் ஓட்ட பயிற்சி எடுத்துக் கொண்டார். ஏபிசிடி 2 படத்திற்காக பல்வேறு விதமான நடனங்களை பயின்ற ஸ்ரத்தா கபூர், தனது அடுத்த படமான பாகி படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிலவற்றிலும் நடிக்க உள்ளாராம். இதற்காக ஸ்ரேதாவிற்கு பிரத்யேக பயிற்சி அளிப்பதற்காக பாங்காக்கில் இருந்து பயிற்சியாளர் ஒருவர் வரைவழைக்கப்பட்டுள்ளாராம். வாரத்திற்கு 5 நாட்கள் என்ற வீதம் தினமும் 2 முதல் 3 மணிநேரம் ஸ்ரத்தாவிற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாம். சூட்டிங்கிற்கு முன்பே ஆக்ஷன் காட்சிகளுக்காக அவர் முழுமையாக தயாராக வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். கைச்சண்டை, கைகளால் தடுத்தல், குத்துதல் போன்ற பயிற்சிகளும் இதில் அடங்குகிறதாம். இது பற்றி ஸ்ரத்தா கூறுகையில், முதல் முறையாக எனது படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க உள்ளேன். இது போன்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சூட்டிங் துவங்குவதற்கு முன் இதற்காக பாங்காக்கில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள பயிற்சியாளரை கொண்டு முறையாக பயிற்சி பெற்று வருகிறேன் என்றார். சாஜித் நாடியாவாலா தயாரிக்கும் பாகி படத்தில் முதல் முறையாக ஸ்ரத்தாவுடன் டைகர் ஸ்ரோஃப் ஜோடி சேர உள்ளார்.