'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாகை சூடவா இனியா மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தபோது அசின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. ஆனால், கவர்ச்சிக்கு கடிவாளம் போட்டதால் அவரை மெகா பட டைரக்டர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால் வேகமாக வளருவார் என்று எதிர்பார்க்கப் பட்ட இனியா, இப்போது கேரக்டர் நடிகையாகி விட்டார். கைவசம் பத்து படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து வருகிறார் இனியா. ஆனால், பெரிய அளவில் கதாநாயகியாக வளர வேண்டிய நான் பின்தங்கியதற்கு காரணமே சில மேனேஜர்கள்தான் என்று வேதனையுடன் சொல்கிறார் இனியா. இதுபற்றி அவர் கூறுகையில், கோடம்பாக்கத்துக்கு நான் புதிதாக வந்தபோது இங்கே யாரையும் எனக்கு தெரியாது. அதனால் யார் எதை சொன்னாலும் நம்பிவிடுவேன். அப்படி நான் நம்பிய சிலர் எனக்கு சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரயிருந்தபோது அதிக சம்பளம் கேட்டு அந்த படங்களை எனக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டனர். அதனால்தான், என் மார்க்கெட் சரிந்துபோனது.
அதன்பிறகு நான் சுதாரித்துக்கொண்டேன். அதனால் எனக்கென்று மேனேஜர் யாரையும் வைக்காமல் இப்போது நானே டீல் பண்ணுகிறேன். அப்படியே யாராவது மேனேஜர் மூலமாக படங்கள் வந்தாலும் அந்த படம் குறித்து நானும் தொடர்புகொண்டு பேசிய பிறகுதான் முடிவெடுக்கிறேன் என்று கூறும் இனியா, இப்போது நான் வித்தியாசமான கேரக்டர்களிலேயே அதிமாக நடிக்கிறேன். என்றாலும், சில படங்கள் கதாநாயகியாகவும் நடிக்கிறேன். அதோடு, படத்துக்குப்படம் வித்தியாசமான ரோல்களில் நடிக்கிறேன். அதனால் கதாநாயகியாக எனது மார்க்கெட் பெரிதாக இல்லை என்றாலும் நல்லதொரு கேரக்டர் நடிகையாக நான் சினிமாவில் நீண்டகாலம் நடிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டிருக்கிறது என்கிறார். மேலும், கதை கேட்பது, சம்பளம், கால்சீட் என அனைத்து விசயங்களையும் தானே டீல் பண்ணி வருகிறார் இனியா.