அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்கும் அளவுக்கு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல். அதோடு, பாபநாசம் படத்திற்கு பிறகு தனது கதை தேர்வு முறையினையும் மாற்றி விட்ட கமல், குறைந்த பட்ஜெட்டில், குறைந்த முதலீட்டில் படங்களை தயாரித்து நடித்து வருகிறார். அதோடு, தூங்காவனம் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 60 நாட்களில் படமாக்கிய கமல், ஏற்கனவே தன்னை வைத்து சாணக்யா என்ற படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். தமிழில் அப்பா அம்மா விளையாட்டு, தெலுங்கில் அம்மா நானா ஆட்டா என்று அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்திக்கு டைட்டீல் யோசித்து வருகிறார்கள்.
மேலும், அந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ஏற்கனவே கமலுடன் சத்யா படத்தில் நடித்த அமலா நடிக்கிறார். தமிழ், இந்திக்கு நடிகை பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ், புலி படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியை இந்தி பதிப்பில் நடிக்க வைக்கலாம் என்றொரு பேச்சுவார்த்தையும் நடக்கிறதாம். அதேசமயம், புலி படத்திற்கு கேட்டதை போல் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் கமலுடன் நடிக்க ஸ்ரீதேவி ஒத்துக்கொண்டால் அது சாத்தியமாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.