ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேடி, வியாபாரி, கல்லூரி படங்களில் நடித்து வந்தபோது இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற ரேஞ்சுக்கு பட்டும் படாமலும் நடித்து வந்தவர்தான் தமன்னா. ஆனால் அயன், பையா படங்களுக்குப்பிறகு அதிரடி நடிகையாக மாறி மார்க்கெட்டில் நின்ற நடிகைகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம், இளவட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த தமன்னா, வீரம் படத்திற்கு முன்புவரை கவர்ச்சியை வாரி வழங்கி வந்தவர், அதையடுத்து ஓவர் கிளாமர் தன்னை சீக்கிரமே மார்க்கெட்டில் இடமிருந்து ஓரங்கட்டி விடும் என்று இப்போது அடக்கிவாசித்து வருகிறார். அதனால் தமன்னா நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு வேறு நடிகைகளை நாடி வருகிறார்கள் இயக்குனர்கள்.
அந்த வகையில், பையாவுக்கு பிறகு மீண்டும் கார்த்தியுடன் தமன்னா இணைந்து நடித்து வரும் தோழா படத்தில் தமன்னாவின் கவர்ச்சிக்கு வேலை கொடுக்கவில்லையாம். மாறாக, இன்னொரு கவர்ச்சி நடிகையை ஒரு குத்துப்பாட்டுக்கு களமிறங்கியுள்ளனர். அதற்காக ஏராளமான நடிகைகளை அழைத்து ஆடிசன் நடத்தியவர்கள் இறுதியாக மொராக்காவில் இருந்து நொரா என்ற மாடல் அழகியை அழைத்து வந்து ஒரு குத்துப்பாட்டுக்கு கார்த்தியுடன் ஆட்டம் போட வைத்துள்ளார்கள். அந்த பாடல் காட்சி தமன்னாவின் கவனத்துக்கு வந்தபோது, நொராவின் பிட் துணி பிரவேசத்தைப்பார்த்து ஆடிப்போய் விட்டாராம். அந்த அளவுக்கு அதிரடி கவர்ச்சி புயல் தமன்னாவுக்கே ஷாக் கொடுத்து விட்டாராம் மொராக்கோ அழகி நொரா.