பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'எந்திரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஷங்கர் - ரஜினிகாந்த் இணைய உள்ள 'எந்திரன் 2' படத்தின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன. படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து ரஜினிகாந்திடமும் அனுமதி பெற்று விட்ட இயக்குனர் ஷங்கர் கடந்த சில மாதங்களாக படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக இருந்தார். ரஜினிகாந்தும் அந்த வேலைகள் முடிவதற்குள் 'கபாலி' படத்தை நடித்துக் கொடுப்பதில் மும்முரமாகிவிட்டார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 'கபாலி' படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அடுத்து அப்படப்பிடிப்பிற்காக சிறிது இடைவெளி விடப்பட்டது.
'எந்திரன் 2' படத்திற்காக ரஜினிகாந்த், அமெரிக்கா சென்று மேக்கப் டெஸ்ட் பணிகளில் ஈடுபடுவதற்காக அந்த இடைவெளி விடப்பட்டது. அதற்காக இரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு 'எந்திரன் 2' படத்திற்காக அவருக்கு எந்த மாதிரியான தோற்றத்தை அளிக்கலாம் என்பது குறித்து இயக்குனர் ஷங்கரும், ரஜினிகாந்தும் மேக்கப் கலைஞர்களுடன் சேர்ந்து முடிவெடுக்க உள்ளார்கள். 'ஐ' படத்திற்காக சிறப்பு மேக்கப் பணிகளைக் கையாண்டி வீட்டா நிறுவனம்தான் 'எந்திரன் 2' படத்திற்காகவும் பணியாற்ற உள்ளார்கள் எனத் தெரிகிறது.
'எந்திரன்' படம் வெளிவந்த பின் இந்த ஐந்து ஆண்டுகளில் சினிமா தொழில் நுட்பத்தில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. 'எந்திரன் 2' படம் இந்திய சினிமாவிற்கே ஒரு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தித் தரும் அளவில் உருவாக உள்ளதாக படக் குழுவைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கிறார்கள்.