தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத் மற்றும் பலர் நடிக்க நவம்பர் 10ம் தேதி தீபாவளியன்று வெளியான திரைப்படம் தூங்காவனம். தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் என்ற பெயரில் கடந்த வாரம் 20ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கில் மிகப் பெரிய வரவேற்பு இல்லாமல் மிகச் சுமாரான படமாக இந்தப் படம் அமைந்தது.
இந்தப் படத்தை டிசம்பர் 4ம் தேதி யு டியூப் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் போகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிடும் தினத்திலேயே டிடிஎச்சில் வெளியிட கமல்ஹாசன் முயற்சி செய்தார். ஆனால், தியேட்டர் உரிமையாளர்களால் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பின் அந்த விவகாரம் பல திருப்புமுனைகளைக் கண்டு கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது.
இப்போது தூங்காவனம் படத்தை படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக யு டியூப் இணையதளத்தில் வெளியிட உள்ளார்கள் என்ற தகவலால் திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் மட்டுமே தூங்காவனம் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 4ம் தேதி சில புதிய படங்கள் வெளிவர உள்ளதால் அந்தத் திரையரங்குகளிலிருந்தும் தூங்காவனம் தூக்கப்பட்டு விடலாம்.
எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியையும் தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் கொண்டு வர முயற்சிக்கும் கமல்ஹாசனின் இந்த யு டியூப் முயற்சிக்கு எப்படிப்பட்ட வரவேற்பும், எதிர்ப்பும் கிடைக்கப் போகிறது என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.