பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரன்பீர் கபூர் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார், ஆனால் சல்மான் கான் ஒரே மாதிரி நடித்து போரடிக்க செய்கிறார் என்று இயக்குநர் அனுராக்பாசு கூறியுள்ளார். பார்ஃபி பட புகழ் அனுராக் பாசு, தற்போது ரன்பீர் கபூர், தீபிகா நடிக்க ''தமாஷா'' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் அனுராக் அளித்த பேட்டியில் சல்மானை நேரடியாக விமர்சித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த துறையில் இருக்க நான் பெருமைப்படுகிறேன். ரன்பீர் ரிஸ்க் எடுத்து சினிமாவில் நடிக்கிறார். ஆனால் பெரும்பாலான நடிகர்கள் இதை செய்வது கிடையாது. ரன்பீர், சல்மான் கானை போன்று ஒரே மாதிரி நடிப்பது கிடையாது. சல்மான் ஒரேமாதிரியாக நடித்து போரடிக்க செய்கிறார். ஆனால் ரன்பீரோ படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுகிறார். இதுவெறும் சம்பளம் தொடர்பான விஷயம் கிடையாது. ஆனால் இதுபோன்ற படங்களை செய்ய ஒரு திருப்தியும் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.