ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் கான் நடத்தி பிரபலமான வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் அனேக ஸ்டார்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக முன்னணி நடிகர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் ஷாரூக்கான் மட்டும் இதுவரை கலந்து கொண்டே இல்லை. காரணம் ஷாரூக்கானுக்கும், சல்மானுக்கும் அவ்வளவாக புரிதல் கிடையாது. இந்நிலையில், இப்போது முதன்முறையாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷாரூக் தான் நடித்துள்ள ''தில்வாலே'' படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் உடன் தில்வாலே படத்தில் நடித்த பிற நடிகர்களான கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் போன்றவர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
'தில்வாலே' படத்தை ரோகித் ஷெட்டி இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தமாதம் டிச.,18ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.