ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பழனியப்பா கல்லூரி, அவன் இவன் உள்பட சில படங்களில் நடித்தவர் மது ஷாலினி. தெலுங்கில் அதிகப்படியான படங்களில் நடித்து வரும் இவர், தமிழிலும் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அந்த வகையில், பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தபோதே அந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால் அதன்பிறகு மது ஷாலினியை கோடம்பாக்கத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், தொடர்ந்து தமிழில் வாய்ப்பு தேடி கல்லெறிந்து வந்த அவரை, கமலின் தூங்காவனம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க அழைத்தனர். அதேசமயம், அந்த படத்தில் கமலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொன்னதால், அப்படியென்றால் அந்த காட்சியே நம்மை பேச வைத்து விடும். அதோடு, புதிய படங்களுக்கு வழி செய்யும் என்ற நம்பிக்கையில் நடித்தார் மது ஷாலினி.
ஆனால், தூங்காவனம் ரிலீசுக்கு பிறகு இதுவரை ஒரு கோலிவுட் டைரக்டர்கள்கூட அவரை தொடர்பு கொள்ளவில்லையாம். அதேசமயம், அந்த படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடித்ததை முன்வைத்து இப்போது தெலுங்குப்பட டைரக்டர்கள் முத்தக்காட்சியில் நடித்தே ஆக வேண்டும் என்று மதுஷாலினியை கட்டாயப்படுத்துகிறார்களாம். விளைவு, இதுவரை தெலுங்கில் சைவ வேடங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தற்போது அசைவ கதாபாத்திரங்களில் நடிக்கவும் கமிட்டாகி வருகிறாராம்.