டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வு ஆகாது!
சல்மான் கானுடன் இணைந்து நடித்த, பிரேம் ரத்தன் தன் பயோ படம், பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்புவதால், உற்சாகத்தில் திளைக்கிறார் சோனம் கபூர். பல தரப்பிலிருந்தும், தன் நடிப்புக்கு பாராட்டு குவிவதால், 'பொண்ணுக்கு சுத்தி போடுங்க' என, சக நடிகையரே, சோனம் கபூரின் பெற்றோரிடம் கூறுகின்றனராம். சோனம் கபூர் அளித்துள்ள பேட்டி:
பிரேம் ரத்தன் வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?
ஏற்கனவே, இதுபோன்ற வெற்றியை அனுபவித்து இருந்தாலும், இந்த படம் மற்ற படங்களை விட, அதிக வசூலை குவித்துள்ளது; என்னை மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளர் உட்பட, அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக பிரச்னைகளில் அதிரடியாக கருத்து தெரிவிக்கிறீர்களே?
நடிகை என்பதால், நடிப்புடன் என் கடமை முடிந்து விட்டது என கருத மாட்டேன்; எனக்கும்,
சமூக பொறுப்பு உள்ளது. அதனால், நம்மை சுற்றி நடக்கும், நம்மை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளீர்களே?
ஆம்; பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதல், மிகவும் கோழைத்தனமாது. வன்முறையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அன்பு, அமைதி, விவாதம், தகவல் தொடர்பு, கல்வி ஆகியவற்றின் மூலம் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.
சமூக வலைதளங்களில் நடிகையர் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியாகிறதே?
யாருக்கும், எந்த ஒரு தனி மனிதரை பற்றியும், தரக்குறைவான கருத்துகளை
தெரிவிக்க உரிமையில்லை என்றே கருதுகிறேன். சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில்
விமர்சிப்போருக்கு, நடிகையர் தான், எளிதான இலக்காக இருக்கின்றனர். இது, மோசமான முன்
உதாரணத்தை ஏற்படுத்துகிறது.
உங்களின் அடுத்த படம்?
அது, ஒரு வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகிறது. யாருடைய வாழ்க்கை வரலாறு என்பது, 'சஸ்பென்ஸ்!' இதில், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன். ஒரு புதிய படத்தில் நடிக்கும்போது, முந்தைய படங்களில் நடித்த வேடங்களை போல் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.