ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த டோலிவுட் இயக்குனர் சோபன் அவர்களின் மகன் சந்தோஷ் சோபன் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். சந்தோஷ் சோபனுக்கு ஜோடியாக நடிகை அவிகா கோர் நடிக்கும் தனு நெனு திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. உய்யலா ஜம்பலா, சினிமா சூபிஸ்தா மாவா போன்ற தெலுங்கு படங்களில் அவிகா கோர் நடித்துள்ளார். உய்யலா ஜம்பலா பட தயாரிப்பாளர் ராம் மோகன் தனு நெனு படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூத்த தயாரிப்பாளர் சுரேஷ் பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் திரையரங்கு டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனு நெனு திரைப்படம் வெற்றி அடைய சந்தோஷ் சோபனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்தோஷ் சோபனுக்கு டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ள மகேஷ் பாபு இயக்குனர் சோபனுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவங்கள் அவரது மகன் சந்தோஷ் வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமாவது மகிழ்ச்சி அளிக்கின்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள தனு நெனு திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மகேஷ் பாபுவின் வாழ்த்துச் செய்தி அறிந்த சந்தோஷ் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.