ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் ரம்யா, திடீரென அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாண்டியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தில் போட்டியிட்டு பார்லிமென்ட் உறுப்பினர் ஆனார். அதன்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த ரம்யா, சிலகாலம் அரசியல் துறவறம் பூண்டார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் ரம்யாவுக்கு மீண்டும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. விரைவில் கர்நாடக சட்ட மேலவைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிட்டு எம்.எல்.சியாக திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கர்நாடக முன்னாள் முதல்வரும், உறவினருமான கிருஷ்ணாவை சந்தித்து ஆதரவு கேட்டார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதுகுறித்து ரம்யா கூறும்போது "நடைபெற இருக்கும் மேலவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறேன். இதற்காக தலைவர்களை சந்தித்து பேசினேன். அவர்களும் வாய்ப்புத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். மாண்டியா மற்றும் பெங்களூர் புறநகர் பகுதிகளில் எனக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்கிறார் ரம்யா.