ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜின் அடுத்த படம் ''தங்க மகன்''. வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும் கதை அதன் தொடர்ச்சி அல்ல. அதைப்போன்ற ஒரு நடுத்தர குடும்பத்து பையனின் கதை. இதில் தனுஷின் அப்பாவாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகாவும் நடிக்கிறார்கள் வி.ஐ.பியில் சமுத்திரகனி, சரண்யா நடித்த மாதிரியான கேரக்டர்.
ஒரு நடுத்தர குடும்பத்து மகன் திருமணத்துக்கு முன்பு காதல், ரொமான்ஸ் என்று பொறுப்பில்லாமல் திரிந்து திருமணத்துக்கு பிறகு எப்படி குடும்ப பொறுப்புள்ளவனாகிறான் என்கிற கதை. இதில் தனுஷ் திருமணத்துக்கு முன்பு எமியுடன் ரொமான்சாக இருப்பார். இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது. அப்பா அம்மா விருப்பத்துக்காக சமந்தாவை திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ்கிறார் என்பது அடுத்த போர்ஷன். இதில் இளம் மனைவியாக சமந்தாவின் நடிப்பும், புகுந்த வீட்டில் அவரது அணுகுமுறையும் அப்படியொரு பாந்தமாகவும் இருக்குமாம்.
அனிருத் இசை அமைத்துள்ளார், ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளர், டிசம்பர் 18ந் தேதி ரிலீசாகிறது. அனேகன், வேலையில்லா பட்டதாரி, மாரி என தொடர் வெற்றிகளை குவிக்கும் தனுசுக்கு இதுவும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்கிறார்கள்.