ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலின் காதல், நண்பேன்டா படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடித்து வரும் படம் கெத்து. அவருடன் எமிஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை திருக்குமரன் இயக்கி வருகிறார். உதயநிதியின் பேவரிட் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் கடந்த மாதத்தோடு படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
அதையடுத்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையிலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் கெத்து படத்தின் பேட்ஜ் ஒர்க் வேலைகள் நடந்து வருகிறது. உதயநிதி, எமிஜாக்சன் இருவரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு படப்பிடிப்பு தளத்தை உதயநிதியின் ரசிகர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக அந்த ஸ்டுடியோ வளாகத்திற்குள் உதயநிதியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் படையெடுத்ததால், அங்கு அதிகப்படியான கூட்டம் கூடி விட்டது. இதனால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, வெளிநபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதோடு, அந்த ஸ்டுடியோவின் வெளி கேட் மூடப்பட்டு பல செக்யூரிட்டிகள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.