பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு |
பாலிவுட் நடிகை மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. பல காதல் கதைகள் அவரை சுற்றிலும் பின்னப்பட்டு இருந்தாலும் தற்போது அவர், தனது அமெரிக்க தோழரான ஜீனி குட் எனஃப் என்பவரை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
30 வயதான ஜீனி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நிதி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவிற்கு ப்ரீத்தி ஜிந்தா சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா சென்று வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. விரைவில் திருமண செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்ப்புகளுடன் பாலிவுட் வட்டாரம் காத்திருக்கின்றது.