தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ஈட்டி படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி முதலானோர் நடித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்கும் தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருப்பதாகவும் அதனால் படத்துக்கு யு சான்றிதழ் தர முடியாது என்று தணிக்கைக்குழுவினர் கூறியதை அடுத்து, அவர்கள் சுட்டிக்காட்டிய காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிட்டனர். எனவே 'இஞ்சி இடுப்பழகி'க்கு அனைவரும் பார்க்க கூடிய படம் எனற 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். தணிக்கை சான்றிதழ் பெற்றதும் வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் என்று வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டனர்.
'பிவிபி சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் ராவ் என்ற தெலுங்குப்பட இயக்குநர் இயக்கியுள்ளார். 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தெலுங்கிலும் நவம்பர் 27 அன்றுதான் வெளியாகவிருக்கிறது. 'பாகுபலி', 'ருத்ரம்மா தேவி' ஆகிய படங்களை தொடர்ந்து அனுஷ்கா நடித்துள்ள படம். இப்படத்தில் குண்டுப்பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஆர்யா டாகுமென்டரி படம் எடுப்பவராக நடித்துள்ளார். சைஸ் ஜீரோ, இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் இரண்டு மொழியிலும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1500 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறதாம்.