'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி தேஜாவின் கிக் 2, ராம் சரணின் ப்ரூஸ் லீ போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி அப்படங்களில் பெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவ்விரு படங்களும் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு கை கொடுக்கவில்லை. ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் நன்னுக்கு பிரேமதோ என்ற படத்திலும், அல்லு அர்ஜுனுடன் சரைனொடு என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார். இதில் நன்னுக்கு பிரேமதோ திரைப்படம் ஜனவரியில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசவுள்ளாராம். பிறப்பில் பஞ்சாபியான ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கு சரளமாக பேசவுதால் இந்த முடிவிற்கு வந்துள்ளார். நன்னுக்கு பிரேமதோ படத்தின் இயக்குனர் சுகுமார் ராகுல் ப்ரீத்தி சிங்கை இப்படத்திற்கு டப்பிங் பேசுமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ராகுல் ப்ரீத்தி சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.