ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகங்களின் கதைகளை கொண்டு மார்வல் தயாரிப்பு நிறுவனம் சூப்பர் ஹீரோ படங்களை பெரிதும் தயாரித்து வருகின்றன. பேட்மேன், சூப்பர் மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், அயர்ன்மேன், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களுக்கு ஹாலிவுட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் சிறுசு முதல் பெருசு வரை தீவிர ரசிகர்கள் தான்.
சூப்பர் ஹீரோ என்றால், அவர் என்ன சாகசம் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு எந்த ஒரு தனிமனித இலக்கணமும் இல்லை. சிலந்தி கடித்தால், ஸ்பைடர் மேன் ஆகிவிடலாம் என எண்ணும் குழந்தைகள் நம்ம ஊரிலும் ஏராளம். பேட்மேனை விட அந்த பட வில்லன் ஜோக்கருக்கு உலக ரசிகர்கள் எக்கச்சக்கம். இப்படி, சூப்பர் மேன் கதைகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அருமையான விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.
1.ஸ்டார்வார்ஸ்: ஃபோர்ஸ்!
1980களில் வெளியாகி உலகையே கலக்கிய படம் ஸ்டார்வார்ஸ் தனது ஏழாவது பாகத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளது. லேசர் கத்தியில் சண்டையிடும் வேற்று கிரக மனிதர்கள் அனைவருமே நமக்கு சூப்பர் ஹீரோக்கள் தான், ஹாரிசன் ஃபோர்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஆன்லைன் புக்கிங்கில் ஏற்கனவே இரண்டு மாதத்திற்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.
உலகை தாண்டி வேற்று கிரகம் உள்ளது. அங்கே நம்மைப் போலவே மனிதர்கள் வாழ்கின்றனர் என்று உலகையே நம்பவைத்த படம் ஸ்டார் வார்ஸ். இதற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்று சொல்வதை விட ரசனை அடிமைகள் இருக்கின்றனர் என்றே சொல்லலாம். ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 18ம் தேதி வெளியாக உள்ளது. யூ-டியூபில் இதன் முன்னோட்டத்தை இதுவரை 20 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். வசூலில் புதிய சாதனையையும் இந்த படம் பிடிக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர் படக்குழுவினர்.
2.பேட்மேன் (வி) சூப்பர்மேன்:
வருகிற 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதியில் பேட்மேன் வி சூப்பர்மேன் படம் வெளியாக உள்ளது. ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இதில் பேட்மேனுடன் சூப்பர்மேனும் மோத தயாராக உள்ளார். பேட்மேனாக பென் அப்லெக்கும், சூப்பர்மேனாக ஹென்றி காவிலும் நடிக்கின்றனர். மேலும் பல பிரபலங்கள் இணைந்துள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டங்கள் பலரையும் மிரட்டி வருகின்றன்.
3.கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்
அடுத்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி, கேப்டன் அமெரிக்காவின் 3ம் பாகம் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்களும் வசூல் வேட்டை செய்ததால், இந்த படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேப்டன் அமெரிக்காவாக க்ரிஸ் எவான்ஸ் நடிக்கிறார். இந்த படத்தில் அயன் மேன் படத்தின் நாயகனாக ராபர்ட் டௌனி ஜூனியரும் அயன் மேனாக வருகிறார். துடிக்கும் துப்பாக்கி மூலம் நமக்கு பரிட்சையமான ஸ்கார்லட் ஜான்சன் கதாநாயகி. அமெரிக்காவை இந்த முறையும் காப்பார் கேப்டன் என நம்பப்படுகிறது.
4.எக்ஸ்மேன்: அப்போகலிப்ஸ்
எக்ஸ்மேன் படங்கள் என்றாலே அதற்கான ரசிகர்கள் கூட்டம் தனி தான். மியூட்டன்ட் எனும் வேறு ஒரு மரபு இனம் மனித இனத்துடன் ஒன்றி வாழ்வதும், அவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் அச்ச போரட்டத்தைப் பற்றிய கதையை, அறிவியல் கலந்து, ஹக் ஜேக்மனின் ஆக்ஷன் கலந்து சொல்லும் படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு சக்தி என நம்மை பிரம்மிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற படம் தற்போது தனது அடுத்த பாகத்திற்கு தயாராகி விட்டது. வழக்கம் போல் புரபோஸர் எக்ஸ், காந்த மனிதன், ஆள் மாறும் மங்கை, இவர்களுடன் வால்வரின் ஹக் ஜேக்மன் தனது ஆக்ஷனுடன் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்தளிப்பார்.
5. வொண்டர் உமன்:
சூப்பர் ஹீரோக்கள் இருக்கும்போது சூப்பர் ஹீரோயிங்கள் இருக்கக்கூடாதா என்ன? வொண்டர் உமனாக வருகிறார் கால் கடாட். கேட் உமன், சூப்பர் கேர்ள் போன்ற படங்களின் வரிசையில் மேலும் ஒரு வலிமையான பெண் பாத்திரம் வொண்டர் உமன். இந்த அற்புத பெண்ணும் நிச்சயம் நிறைய ஆண் ரசிகர்கள் நெஞ்சங்களில் கொள்ளை அடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவரை திரையில் காண 2017 வரை காத்திருக்க வேண்டும்.