ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
என்னதான் மோசமான விமர்சனம் வந்தாலும் சல்மான் கான் சல்மான் கான் தான். பிரேம் ரத்தன் தன் பாயோ படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் இணைந்து நடித்த பிரேம் ரத்தன் தன் பாயோ படம், கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியது.
படத்திற்கு விமர்சனங்கள் கடுமையாக வந்தாலும் பிரேம் ரத்தன் தன் பாயோவையும் சல்மானையும் ரசிகர்கள் ஏமாற்றவில்லை. குடும்ப கதை படம் என்பதால் ஆல் சென்டர் ஆடியன்ஸ்ம் அட்டென்டன்ஸ் போட்டு படத்தை ஹிட்டாக்கி விட்டனர்.
இந்நிலையில் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. சல்மான் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலை தாண்டிய படங்களி்ல இது ஒன்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் அடுத்ததாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார்.