திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தி சவ்கீன்ஸ் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதால் நடிகை நர்கீஸ் பக்ரி மீது, நடிகர் அக்ஷை குமார் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம். நர்கீஸ் பக்ரி மறுத்ததால் தான் அந்த வேடத்தில் லிசா ஹைடன் நடித்தாராம். அதற்கு பிறகும் அக்ஷை குமார்-நர்ஜீஸ் பக்ரி இடையேயான கோபம் சரி செய்யப்படாமல் அப்படியே தான் இருந்து வருகிறதாம். தற்போது, அக்ஷை மற்றும் நர்கீஸ் இருவரும் ரோஹித் தவான் இயக்கும் விசூம் படத்தில் நடிக்கிறார்களாம். இருப்பினும் இவர்கள் வரும் காட்சிகள் தனித்தனியாக தான் படமாக்கப்பட வேண்டும் என்றும், எந்த காரணத்திற்காகவும் இருவரும் ஒன்றாக வரும் காட்சிகளை அமைக்கக் கூடாது இருவரும் டைரக்டர் ரோஹித் தவானிடம் திட்டவட்டமாக கூறி விட்டார்களாம். அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சியை ரோஹித் தவானும் படத்தில் அமைக்கவில்லையாம். இந்த படத்தில் அக்ஷை, நர்கீஸ் உடன் வருண் தவான், ஜான் ஆப்ரகாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம்.