ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபங்களின் ஒளி தீபாவளி. தித்திக்கும் இன்பம் பொங்கும் இந்த தீபாவளியை திரை நட்சத்திரங்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று இங்கு பார்ப்போம்...
நடிகர் விஜய சேதுபதி: நிறைய தீபாவளியை கொண்டாடி இருக்கிறேன். ஆனால், இந்த தீபாவளி சிறப்பாக அமைந்துள்ளது. நானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து, காதலும் கடந்து போகும், இறைவி, சேதுபதி படங்களில் நடித்து வருகிறேன். இந்தாண்டு சேதுபதி படப்பிடிப்பில் இருப்பதால், தீபாவளியை மதுரையில் தான் கொண்டாடுவேன் என நினைக்கிறேன். நானும் ரவுடி தான் படத்தின் முடிவுக்காக மிகவும் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், 'ரிசல்ட்' எனக்கு அதிக நம்பிக்கை தந்துள்ளது.
'கிருமி' கதிர்: எனது சொந்த ஊர் கோவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்தாண்டு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போகிறேன். நான் சிறுவயது முதலே பட்டாசு வெடிப்பதில்லை. இந்தாண்டு எனக்கு சந்தோஷமான தீபாவளியாக அமைந்துள்ளது.
'அவன் இவன்' ஜனனி அய்யர்: கடந்தாண்டு தீபாவளியை கேரளாவில் ஷூட்டிங்கில் தான் கொண்டாட முடிந்தது. இந்தாண்டு சென்னையில் வீட்டில் அம்மாவின் கேசரி இனிப்புடன் நான் எடுத்த இரண்டு சல்வார் அணிந்து, குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடப்போகிறேன்.
நடிகர் பிரசாந்த்: எத்தனை தீபாவளி கொண்டாடினாலும், தீபாவளி என்ற சொல்லை கேட்டாலே தனி உற்சாகம் பிறந்த விடும். சிறுவயதில், பட்டாசுகளை அதிகமாக வெடிப்பேன். வீட்டை சுற்றி குப்பைமயமாக இருக்கும். அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை அறிந்த பின் பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டேன். அம்மா செய்யும் இனிப்போடு, இந்தாண்டு சாகசம் படக்குழுவினரோடு தீபாவளி கொண்டாடப்போகிறேன்.
'பில்லா' ருக்மணி: எனது சொந்த ஊர் பெங்களுரூ. எனது வாழ்க்கையில், பயணத்திலேயே 80 சதவீதம் சென்று விடும். நான் தற்போது அமெரிக்காவில் நடன நிகழ்ச்சியில் இருக்கிறேன். இந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் தான் இந்தியா வருகிறேன். இந்தாண்டு குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடப்போகிறேன்.
'சங்கராபரணம்' துளசி: நான் கல்யாணம் ஆகி பெங்களுரூவில் 'செட்டில்' ஆகி விட்டேன். தெலுங்கில் மகேஷ்பாபு படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் படப்பிடிப்பில் இருப்பதால், இந்தாண்டு தீபாவளியை, வீட்டில் கொண்டாட முடியாது. வேலையும் முக்கியமல்லவா. எனது கணவரையும் மகனையும் வீட்டில் விளக்கேற்றி, தீபாவளி கொண்டாட கூறியுள்ளேன். இந்தாண்டு தீபாவளி 'ஷூட்டிங் ஸ்பாட்'டில் தான்.
நடிகை லைலா: நான் மும்பையில் இருப்பதால், தமிழ் ரசிகர்களை அதிகம் 'மிஸ்' பண்றேன். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை அதிக முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி உள்ளேன். நான் கிறிஸ்த மதத்தை சேர்ந்தவள் என்பதால், நான் வீட்டில் தீபாவளி கொண்டாடுவது இல்லை. ஆனால் பக்கத்து வீடுகளில் தீபாவளி கொண்டாடி இனிப்புகளை பகிர்ந்து கொள்வர். ஆர்யா, சூர்யா, கார்த்தி, அஜீத் ஆகியோருக்கு எனது தீபாவளி வாழ்த்துகள். சமீபத்தில், நடந்த நடிகர் சங்க தேர்தலில் நான் தபால் ஓட்டை பதிவு செய்துள்ளேன். இதை மறக்காமல் போட்டு விடுங்கள்.
நடிகை வேதிகா : பிரபுதேவா தயாரிப்பில், வினோதன் படம் ஷூட்டிங்கில் உள்ளேன். மலையாளத்தில் ஒரு படம், சிவராஜ் குமாருடன் கன்னட படம் என கொஞ்சம் பிஸியாக உள்ளேன். தீபாவளிக்கு காளஹஸ்தி போக உள்ளேன். மும்பை, பெங்களூரில் வீடு உள்ளது. மும்பையில் பூஜை முடித்துவிட்டு பெங்களூர் வந்துவிடுவேன். அம்மா செய்யும் லட்டு ரொம்ப பிடிக்கும். அனார்கலி டிரஸ் வாங்கியுள்ளேன். இந்த தீபாவளியை ரொம்ப கொண்டாடுவேன்.
ஆனந்தி : பண்டிகை படத்தின் ஷூட்டிங்கில் உள்ளேன். வாராங்கலில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போறேன். காக்ரா டிரஸ் எடுத்து வைத்துள்ளேன். இந்த தீபாவளி கலர்புல் தீபாவளியாக இருக்கும்.
தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்
நடிகர் அஜீத்தின், வேதாளம் படம் தீபாவளிக்கு வெளியாவதால், இது அனைவருக்குமே, ‛தல' தீபாவளி என்கின்றனர் அஜீத் ரசிகர்கள். ஆனால், உண்மையிலேயே இந்தாண்டு, ‛தலை தீபாவளி' கொண்டாடும் திரை நட்சத்திரங்கள், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளனர். இந்தாண்டு தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்களில் சிலர்:
* டிமாண்டி படம் மூலம் ‛ஹிட்' கொடுத்த நடிகர் அருள்நிதி - கீர்த்தனா
* நடிகர் பாக்யராஜின் மகனும், சக்கரகட்டி நடிகருமான சாந்தனு - கீர்த்தி
* இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா - ஜப்ருன்னிசா. (இது யுவனுக்கு மூன்றாவது திருமணம்)
* குறும்பு, போராளி படங்களில் நடித்த, அல்லரி நரேஷ் - விருபா.
* எம்.ஜி.ரஹீமா என, சமீபத்தில் பெயரை மாற்றி, இஸ்லாமுக்கு மதம் மாறிய அழகி பட நாயகி மோனிகா - தொழிலதிபர் மாலிக்
* நடிகை விஜயலட்சுமி - பண்டிகை பட இயக்குனர் பெரோஸ்
* இசையமைப்பாளர் சைமன் - பின்னனி பாடகி ஷீபா
* குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் பட ஹீரோயினும், டாக்டருமான தனன்யா - விக்ரம் ஆர்யன்
* தெலுங்கு நாயகனும், தமிழில், என்னை தெரியுமாபடத்தில் நடித்த மனோஜ் மஞ்சு - பிரணீதா
*அரவிந்த்சாமியின் சகோதரி விபா - ரான் கோஹ்லி
*வெத்து வேட்டு பட நாயகன் ஹரீஷ் - டாக்டர் அபிநயா
*நடிகர் விதார்த் - காயத்ரி தேவி
*அழகர்சாமியின் குதிரை பட நாயகி சரண்யா மோகன் - டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன்
* கவர்ச்சி நாயகி பாபிலோனா - தொழிலதிபர் சுந்தர் பபுல்ராஜ்