ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
உலகின் உயரமான சாதனையாளர் என்று வர்ணிக்கப்படுகிறவர் பிலிப்பி பெடிட். இவர் உயரமான கட்டிடங்களை கயிறு கொண்டு இணைத்து கட்டி எந்த பிடிமானம், பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அதன் மீது நடந்து சாதனை படைப்பவர். நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையமான இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்படுவதற்கு முன் அதாவது 1974ம் ஆண்டு இரண்டு கட்டிடங்களையும் அந்தரத்தில் நடந்தது இவரது உச்சபட்ச சாதனை.
இவர் தன் வாழ்க்கை கதையை ரீச் தி க்ளவுட்ஸ் என் புத்தகமாக எழுதியிருந்தார். இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கும் படம்தான் தி வாக். ரொமான்சில் தி ஸ்டோன், பேக் டு தி பியூச்சர், பாரஸ்ட் கம்ப், தி போலார் எக்ஸ்பிரஸ், தி ப்ளைட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனரான ராபர்ட் ஜெமிக்கில் இயக்கி உள்ளார். ஜோஸப் கார்டன்லெவிட், பிலிப்பி பெடிட் வேடத்தில் நடித்திக்கிறார். மற்றும் பென் கிங்ஸ்லி, சார்லோட்டி லீபான், ஸ்டீவ் வாலண்டின் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாகி உள்ளது.
எல் ஸ்டார் கேபிட்டல், இமேஜ் மூவீஸ் நிறுவனம் சுமார் 300 கோடியில் தயாரித்துள்ள இந்த படம் கடந்த மாதம் 26ந் தேதி நியூயார்க் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்துள்ளது. படத்தை இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும், 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.