இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆனால் அப்படத்தை இப்போது வரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தபோதும், பொதுமக்கள் மத்தியில் படம் சரியில்லை என்றொரு செய்தி வேகமாக பரவியது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், புலி குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய நல்ல படம் என்று செய்தி பரப்பினர். ஆக இரண்டுவிதமான கருத்துக்களுக்கிடையே இப்போதுவரை புலி வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இதுவரை விஜய் படங்கள் இல்லாத அளவுக்கு இந்த புலி வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இங்கிலாந்து, ஜப்பான், பிரிட்டன் உள்பட பல நாடுகளில் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்திற்கு இணையாக அதிகபட்ச தியேட்டர்களில் திரையிட்டனர். அதில் சில நாடுகளில் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை என்றபோதும், பிரிட்டனில் பெரிய அளவில் வசூலித்துள்ளதாம் புலி.
அதாவது, பிரிட்டனில் திரையிட்ட நாளில் இருந்தே குடும்பம் குடும்பமாக புலி படத்தை பார்த்து ரசித்து வருகிறார்களாம். அதனால் அங்கு எதிர்பாராத வெற்றி பெற்று ஒரே வாரத்தில் 1.65 கோடி வசூலித்துள்ளதாம் புலி. இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லையாம். ஆக, இதற்கு முன்பு பிரிட்டனில் வெளியான தமிழ் படங்களின் வெற்றியை முறியடித்து அங்கு அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படமாகியிருக்கிறது விஜய்யின் புலி.