‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்திய திரையிசையின் தேவதை என்ற வர்ணிக்கப்படும் லதா மங்கேஷ்கரும், அவரது சகோதரி ஆஷா போஸ்லேயும் இணைந்து மறைந்த தங்கள் சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து ஆண்டுதோறும் அவர் பெயரில் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இதனை செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்க லதா மங்கேஷ்கரும், ஆஷா போஸ்லேயும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்திய திரையிசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும். உலக இசையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகவும் இந்த விருதை ரகுமானுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம். என்று இசை சகோதரிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்த விருது வழங்கும் விழா வருகிற 26ந் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் பாலிவுட் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.